/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இழப்பீட்டு தொகையை உயர்த்த பழங்குடியினர் வலியுறுத்தல்
/
இழப்பீட்டு தொகையை உயர்த்த பழங்குடியினர் வலியுறுத்தல்
இழப்பீட்டு தொகையை உயர்த்த பழங்குடியினர் வலியுறுத்தல்
இழப்பீட்டு தொகையை உயர்த்த பழங்குடியினர் வலியுறுத்தல்
ADDED : ஏப் 28, 2025 11:31 PM

ஊட்டி, ;தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், நீலகிரி மாவட்ட குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் போஜராஜ் தலைமை வகித்தார். கமலாச்சி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புலியாளம், மண்டக்கரை, நாகம்பள்ளி, நெல்லிக்கரை, குண்டித்தால்,பெண்ணை, முதுகுளி கிராமங்களை சேர்ந்த காட்டுநாயக்கர், பணியர், முள்ளு குரும்பர், பெட்ட குரும்பர், இருளர் ஆகிய பழங்குடி மக்களை வெளியேற்றியுள்ளனர்.
வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையில் முறைகேடு செய்த வனச்சரகர், வக்கீல், நில புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இழப்பீட்டு தொகையை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.