தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காளான் சாகுபடியில் முத்திரைபதிக்கும் சுரபி

காளான் சாகுபடியில் முத்திரைபதிக்கும் சுரபி

காளான் சாகுபடியில் முத்திரைபதிக்கும் சுரபி


UPDATED : நவ 02, 2026 07:05 PM

ADDED : நவ 02, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 07:05 PM ADDED : நவ 02, 2026 07:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: விவசாயத்தின் மீதான ஆர்வத்தையும், கடின உழைப்பையும் முதலீடாக கொண்டு, காளான் வளர்ப்பில் வெற்றி கண்டுள்ளார் குடும்பத் தலைவி சுரபி.

பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அடுத்த குலுக்கல்லுார் சுண்டம்பற்றையை சேர்ந்தவர் சுரபி. இவர், வீட்டு நிர்வாகத்துடன், இரண்டு காளான் பண்ணை அமைத்து, பெண் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளார்.

'விக்டரி' என்ற பெயரில் பண்ணைகளை நடத்தி வரும் இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்துறையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மதிப்புக்கூட்டப்பட்ட காளான் தயாரிப்புகளை அரசின் கீழ் செயல்படும் பெண்களின் அமைப்பான ‘குடும்பஸ்ரீ’ விற்பனை கண்காட்சிகள் வழியாக பரவலாக கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளார். பெண்களும் முறையான திட்டமிடலோடு செயல்பட்டால் விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்.

இது குறித்து சுரபி கூறியதாவது:

கேரளாவின் சீதோஷ்ண நிலைக்கு உகந்த சிப்பி காளான்களை பிரதானமாக சாகுபடி செய்கிறேன். ஒரு காளான் படுக்கையிலிருந்து, 700 கிராம் முதல் 1 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. சந்தையில் ஒரு கிலோ காளான் ரூ.500 வரை விற்பனையாகிறது.

காளான்களை விற்பனை செய்வதுடன், காளான் ஊறுகாய் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்களையும் தயாரித்து சந்தைப்படுத்துகிறேன். காளான் சாகுபடியில் இறங்குவதற்கு முன், பட்டாம்பி வேளாண் அறிவியல் மையத்தில் நானும், குடும்பத்தினரும் மூன்று நாட்கள் முறையான பயிற்சி பெற்றோம்.

எனது முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், ‘காளான் கிராமம்’ திட்டத்தின் கீழ், பண்ணை அமைக்க ரூ.2 லட்சமும், பேக்கிங் பிரிவுக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்பட்டது. மேலும், நான் உறுப்பினராக உள்ள ‘விகாஸ் குடும்பஸ்ஸ்ரீ’ அமைப்பும் துணை நிற்கிறது.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us