ADDED : நவ 08, 2026 06:33 PM

கூடலூர்: கூடலூர், தேவர்சோலை அருகே, கடமான் வேட்டையாடியது தொடர்பாக இருவரை வனத்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
கூடலூர், தேவர்சோலை பகுதியில் தீபாவளியை முன்னிட்டு வனவிலங்கு வேட்டையை தடுக்க முதுமலை புலிகள் காப்பகம் நெலக்கோட்டை வனச்சரக
வன ஊழியர்கள், கூடலூர் சரக வன ஊழியர்கள் இணைந்து நேற்று முன்தினம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேவர்சோலை பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டது. வன ஊழியர்கள் சோதனை பணியை தீவிரப்படுத்தினர். அவ்வழியாக வந்த காரை, நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கடமானின் இரண்டு காலுடன் இறைச்சி கடத்தி வருவது தெரிய வந்தது. காருடன் பறிமுதல் செய்த வனத்துறையினர், காரில் வந்த இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், 'அவர்கள் தேவர்சோலை பகுதியைச் ஹரிதாஸ், 35, சஜின்தேவ், 34, என்பது, இவர்கள், அதே பகுதியை சேர்ந்த விவேக், நௌபோல் ஆகியோர்
துப்பாக்கியால் கடமானை, வேட்டையாடியதும், அவர்கள் அழைத்ததை தொடர்ந்து அங்கு சென்று, கடமான் இறைச்சியை காரில் எடுத்து வந்தது தெரிய வந்தது.
இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அருகே உள்ள, காபி தோட்டத்தில் வன ஊழியர்கள்ஆய்வு செய்து, கடமானின் உடல் பாகங்களை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கடமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை எடுத்து சென்றது தொடர்பாக, இருவரை கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவர் கடமான வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து சென்று தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும், வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கியும் தேடி வருகிறோம்.' என்றனர்.
