சாலையில் 'ஒட்டு' போடும் பணி வாகன டிரைவர்கள் அதிருப்தி
சாலையில் 'ஒட்டு' போடும் பணி வாகன டிரைவர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 18, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் அவசர கதியில் நெடுஞ்சாலையில் ஒட்டு போட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேவாலா முதல் பந்தலுார் வரையிலான, நெடுஞ்சாலை பெரும்பாலான இடங்களில் சேதமடைந்துள்ளது. இப்பகுதியில், சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் வருகையின் போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அவசர கதியில் ஒட்டு போடும் பணியில் ஈடுபட்டனர். வாகன ஓட்டுனர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'இப்பகுதியில் தார் சாலை போட வேண்டும்,' என, வலியுறுத்தினர்.
எனினும், இதுவரை நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
