/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காய்கறி தோட்டங்களுக்கு குழாய் வாயிலாக தண்ணீர்
/
காய்கறி தோட்டங்களுக்கு குழாய் வாயிலாக தண்ணீர்
ADDED : ஏப் 01, 2025 09:49 PM

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் காய்கறி தோட்டங்களுக்கு விவசாயிகள் குழாய் வாயிலாக தண்ணீர் பாய்ச்சி, பயிரை பராமரித்து வருகின்றனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலைக்கு அடுத்தபடியாக, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, காலிபிளவர், உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட, மலை காய்கறி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பாண்டு, நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில் அதிக பரப்பளவில் பீன்ஸ் பயிரிட்டு, விவசாயிகள் அதிக சிரத்தையுடன், தோட்டங்களை பராமரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, வெயிலான காலநிலை நிலவி வருகிறது. இதனால், விவசாய நிலங்களில் ஈரப்பதம் படிப்படியாக குறைந்து வருகிறது.
பயிரை பாதுகாக்க ஏதுவாக, விவசாயிகள் ஓடைகளை மறித்து, தடுப்புகள் அமைத்து, இரவு நேரங்களில் அங்கு சேகரமாகும் தண்ணீரை, பகல் நேரங்களில் 'மோட்டார் பம்ப்' உதவியுடன், குழாய் வாயிலாக தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

