/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!: ஈளாடா தடுப்பணையை துார்வாருவது அவசியம்
/
கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!: ஈளாடா தடுப்பணையை துார்வாருவது அவசியம்
கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!: ஈளாடா தடுப்பணையை துார்வாருவது அவசியம்
கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!: ஈளாடா தடுப்பணையை துார்வாருவது அவசியம்
UPDATED : டிச 13, 2025 08:04 AM
ADDED : டிச 13, 2025 07:55 AM

கோத்தகிரி: கோத்தகிரி நகரில் தொடரும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, ஈளாடா தடுப்பணையை துார்வார வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளுக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த தடுப்பணை, 1972ம் ஆண்டு எல்.ஐ.சி., வாயிலாக, 14 லட்சம் ரூபாய் கடன் பெற்று அமைக்கப்பட்டது.
இந்த தடுப்பணையில் இருந்து வரும் தண்ணீர், கேர்பெட்டா புத்துாரில் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து ராம்சந்த் பகுதியில் உள்ள 'மெகா' குடிநீர் தொட்டியில் சேகரித்து, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்த அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர், நகரில் பெருகி உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை. இதனால் வறட்சி, கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது வழக்கமாக உள்ளது.
ரூ. 41 கோடியில் திட்டம் இதனை தவிர்க்க, மத்திய அரசின் அம்ரூத், 2.0 திட்டத்தில், அனைத்து குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வினியோகிக்க ஏதுவாக, 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி நிறைவடையும் பட்சத்தில், குடியிருப்புகளுக்கு தண்ணீர் கிடைக்க ஏதுவாக அமையும். இருப்பினும், ஈளாடா தடுப்பணை, துார்வாரப்படாமல் இருப்பதால், தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. ஏற்கனவே, நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அளக்கரை மெகா குடிநீர், 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட, திட்டம் தோல்வி அடைந்தது.
கோடையில் தட்டுப்பாடு வரும் இந்நிலையில், ஈளாடா அணையின் ஆழமும் அகலமும் குறைந்துள்ள நிலையில் மழை நீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், எதிர்வரும் வறட்சி நாட்களில் மக்களுக்கு முழுமையாக தண்ணீர் வினியோகிக்க முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் அணையை துார்வாரி முழுமையாக தண்ணீர் சேமிக்கும் வகையில், நடவடிக்கை எடுப்பது அவசியம்.
கோத்தகிரி தன்னார்வலர் மணிகண்டன் கூறுகையில்,''ஆண்டுதோறும் கோடை காலங்களில் கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது வழக்கமாக உள்ளது.
இப்பகுதி பேரூராட்சியாக இருந்த நேரத்தில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, மக்கள் தொகுதி அதிகரித்துள்ளதால், எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் அணையை துார் வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்,'' என்றார்.

