/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெல் நாற்றுகளை மிதித்து சேதம் செய்த காட்டு யானை; விவசாயிகளுக்கு நஷ்டம்
/
நெல் நாற்றுகளை மிதித்து சேதம் செய்த காட்டு யானை; விவசாயிகளுக்கு நஷ்டம்
நெல் நாற்றுகளை மிதித்து சேதம் செய்த காட்டு யானை; விவசாயிகளுக்கு நஷ்டம்
நெல் நாற்றுகளை மிதித்து சேதம் செய்த காட்டு யானை; விவசாயிகளுக்கு நஷ்டம்
ADDED : ஆக 10, 2025 09:25 PM

கூடலுார்; கூடலுார் தொரப்பள்ளி பகுதியில் நடவுக்கு தயாரான நெல் நாற்றுகளை காட்டு யானைகள் மிதித்தது சேதம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுாரில் நடப்பாண்டு சீசனுக்கு முன்னதாகவே, பருவமழை துவங்கி பெய்து வருகிறது.
இதனால், வயல்களில் நெல் விவசாயத்துக்கான தண்ணீர் தடையின்றி கிடைத்துள்ளது. ஆடி மாதம் துவக்கத்தில், விதை நெல் விதைத்தனர்.
தொடர்ந்து, வயல்களில் உழவு பணி மேற்கொண்டு, தற்போது, நெல் நாற்றுகளை பறித்து நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொரப்பள்ளி குனில் பகுதியிலும், விவசாயிகள் நெல் நாற்றுகள் பறித்து நடவு செய்ய துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு இப்பகுதியில் நுழைந்த காட்டு யானை, நடவுக்கு தயாராக உள்ள நெல் நாற்றுகளை மிதித்து சேதம் செய்துள்ளது. மக்கள் சப்தமிட்டு யானையை விரட்டினர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறுகையில், 'காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொந்தரவு காரணமாக, பலரும் நெல் விவசாயத்தை தவிர்த்து உள்ளனர். குறிப்பிட்ட சில விவசாயிகள் தொடர்ந்து நெல் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, நடவுக்கு தயாராக உள்ள நெல் நாற்றுகள் காட்டு யானைகள் மிதித்து சேதம் செய்வதால், நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலையுள்ளது.
எனவே, காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் முதுமலை வனத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அகழியை சீரமைத்து, அதனை ஒட்டி, சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்,'என்றனர்.