UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 07:04 PM

ஊட்டி:
ஊட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், நாளை நடக்கும் நிலையில், நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
இவ்விழாவை ஒட்டி நேற்று பகல், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணிவரை, அனுக்ஞை ஆசார்ய வர்ணம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், பாலிகாஸ்தாபனம், ஹோமம், திவ்ய பிரபந்த வேத போராயணம், பூர்ணாகுதி மற்றும் திருவாராதனம் சாற்று முறை நிகழ்ச்சிகள் நடந்தன.
அதன் ஒரு நிகழ்வாக, பகல், 2:00 மணிக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. புதிய அக்ரஹாரம் ஸ்ரீ வேணுகோபால் கோவிலில் துவங்கிய ஊர்வலம், கமர்சியல் சாலை வழியாக, ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலை சென்று அடைந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
இன்று காலை, 8:00 மணி முதல், 12:00 மணிவரை, திருப்பள்ளி எழுச்சி, அலங்கார திருமஞ்சனம் மற்றும் பெருமாள் யாகசாலைக்கு எழுந்தருளல் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய திருவிழா நாளான, நாளை காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, ஐயனுக்கு அலங்காரம், திருவாராதனம், மங்கள ஆரத்தி தீர்த்த பிரசாதம் வினியோகத்தை அடுத்து, பகல், 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஐயனின் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
