தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அட்டப்பாடி பழங்குடியின முதியோருக்கு கம்பளி: ‘சினேகபரிதம்’ திட்டத்துக்கு பாராட்டு

அட்டப்பாடி பழங்குடியின முதியோருக்கு கம்பளி: ‘சினேகபரிதம்’ திட்டத்துக்கு பாராட்டு

அட்டப்பாடி பழங்குடியின முதியோருக்கு கம்பளி: ‘சினேகபரிதம்’ திட்டத்துக்கு பாராட்டு


UPDATED : அக் 22, 2026 06:31 PM

ADDED : அக் 22, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 06:31 PM ADDED : அக் 22, 2026 06:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: அட்டப்பாடி காராரா அரசு பள்ளி மாணவர்கள், பழங்குடியின முதியோரை நேரில் அழைத்து கம்பளி போர்வைகளை வழங்கினர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் வரும் நாட்களில் கடுமையான குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், காராரா அரசு பள்ளி மாணவர்கள், அருகிலுள்ள பழங்குடியின கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஆதரவின்றியும் உடல்நல குறைவாலும் பாதிக்கப்பட்டிருந்த, 100 வயது மூதாட்டி மாரி உள்ளிட்ட 30 முதியவர்களை கண்டறிந்தனர். அவர்களுக்கு குளிர்கால பாதுகாப்புக்காக கம்பளி போர்வைகளை மாணவர்கள் திரட்டி வழங்கினர். மாணவர்களின் ‘சினேகபரிதம்’ திட்டத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மாணவர்களின் இந்த சமூக சேவையை அறிந்த கோவை இன்னர் வீல் கிளப் உறுப்பினர்கள், பள்ளிக்கு நேரில் வந்து, முதியவர்கள் அனைவருக்கும் தேவையான கம்பளி போர்வைகள் மற்றும் சால்வைகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து, தனிமையில் வாடும் அந்த முதியவர்களுக்கு ஒரு நாளை மகிழ்ச்சியாக மாற்றும் நோக்கில், அவர்களை பள்ளி வளாகத்திற்கு மாணவர்கள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்குத் தேநீர் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. முதியவர்கள் அனைவருக்கும் போர்வைகள் போர்த்தப்பட்டு, பள்ளி பேருந்து வாயிலாக, அவர்களது இருப்பிடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வை, அட்டப்பாடி வட்டார ஊராட்சி துணைத் தலைவர் ஈஸ்வரி ரேஷன், 100 வயது மூதாட்டி மாரிக்கு சால்வை அணிவித்து தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தினேஷ்குமார் பங்கேற்று பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us