/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தை காட்டெருமைகள் முற்றுகையிட்டதால் பணியில் தொய்வு
/
தேயிலை தோட்டத்தை காட்டெருமைகள் முற்றுகையிட்டதால் பணியில் தொய்வு
தேயிலை தோட்டத்தை காட்டெருமைகள் முற்றுகையிட்டதால் பணியில் தொய்வு
தேயிலை தோட்டத்தை காட்டெருமைகள் முற்றுகையிட்டதால் பணியில் தொய்வு
ADDED : நவ 25, 2025 07:06 AM

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் குட்டிகளுடன், கூட்டமாக உலா வரும் காட்டெருமைகளால், பசுந்தேயிலை பறிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள், புற்கள் உட்பட, களை செடிகள் அதிகம் வளர்ந்துள்ள தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவது வழக்கம்.
தற்போது, மழை பெய்து வரும் நிலையில் தோட்டங்களில் வளர்ந்துள்ள களை செடிகளை தேடி நாள்தோறும் காட்டெருமை கூட்டம் வருகிறது.
அச்சமடைந்த தொழிலாளர்கள், தோட்டத்திற்கு செல்வதை கூடுமானவரை தவிர்த்து வருகின்றனர். இதனால், எதிர்பார்த்த அளவுக்கு, பசுந்தேயிலை அறுவடை செய்ய முடியாமல் உள்ளதால், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் கூறுகையில், 'காட்டெருமைள் நாள்தோறும் வருவதால், தேயிலை பறிக்க முடிவதில்லை. நேற்று முன்தினம் கூட, ஒரு முதியவரை காட்டெருமை முட்டியதால் காயம் ஏற்பட்டது. எனவே, காட்டெருமை நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வனத்துறையினர் ஆய்வு செய்து, அவைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

