UPDATED : நவ 24, 2026 05:14 PM
ADDED : நவ 24, 2026 05:14 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு அருகே, போதை பொருளுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், திருத்தாலா போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆலூர் பகுதியில் உள்ள அனீஷ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 52.72 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகப் அனீஷ், 40, கைது செய்யப்பட்டார்.
போதை பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், இதன் பின்னணியில் செயல்படும் கடத்தல் கும்பல் குறித்தும் போலீசார் விசாரித்தனர். அதன்பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், சிறையில் அடைத்தனர்.
