/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ஏட்டு மனைவி பலாத்கார முயற்சி: காமுக போலீஸ் சஸ்பெண்ட்
/
ஏட்டு மனைவி பலாத்கார முயற்சி: காமுக போலீஸ் சஸ்பெண்ட்
ஏட்டு மனைவி பலாத்கார முயற்சி: காமுக போலீஸ் சஸ்பெண்ட்
ஏட்டு மனைவி பலாத்கார முயற்சி: காமுக போலீஸ் சஸ்பெண்ட்
ADDED : பிப் 15, 2024 09:25 PM
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, ஏட்டு மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற போலீசை சஸ்பெண்ட் செய்து பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஷ்யாம்ளாதேவி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றும் சதீஸ்குமார் என்பவரின் மனைவி பிருந்தா, 24, என்பவரை ஆயுதப்படை போலீஸ்காரரான பிரபாகரன், 31, என்பவர், கடந்த 12ம் தேதி இரவு குடிபோதையில் பலாத்கார நோக்கத்துடன் துாக்கிச் செல்ல முயன்றார். போலீசில் பிருந்தா கொடுத்த புகாரில் பெரம்பலுார் போலீசார் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதைத்தொடர்ந்து, பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஷ்யாம்ளாதேவி உத்தரவிட்டார்.