/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
/
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
ADDED : செப் 20, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:பெரம்பலுாரில், 10ம் வகுப்பு படித்து விட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 68. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், 30 ஆண்டுகளாக அம்மாபாளையம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.
இது குறித்து தகவலறிந்த மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநர் மாரிமுத்து தலைமையிலான மருத்துவ குழுவினர், நேற்று விசாரணை நடத்தினர்.
மருத்துவம் படித்ததற்கான எந்த ஆவணங்களும் இல்லாததால், அன்பழகனை செஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.