/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்; முதியவருக்கு இரட்டை 'ஆயுள்'
/
மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்; முதியவருக்கு இரட்டை 'ஆயுள்'
மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்; முதியவருக்கு இரட்டை 'ஆயுள்'
மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்; முதியவருக்கு இரட்டை 'ஆயுள்'
ADDED : டிச 26, 2025 02:55 AM

பெரம்பலுார்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பெரம்பலுார் மாவட்டம், கல்பாடி ஊராட்சிக்குட்பட்ட, கே.எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ, 55. இவர், 2021 அக்., 5ம் தேதி செப்பலான் மேடு என்ற இடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட, 32 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகாரின்படி, பெரம்பலுார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில், ராஜீயை கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், ராஜீக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி இந்திராணி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.