/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
'முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக தண்ணீர் எடுக்கிறார்'
/
'முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக தண்ணீர் எடுக்கிறார்'
'முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக தண்ணீர் எடுக்கிறார்'
'முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முறைகேடாக தண்ணீர் எடுக்கிறார்'
ADDED : மே 02, 2024 02:50 AM
இலுப்பூர் அருகே மேட்டுசாலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது கல்லுாரிக்கு முறைகேடாக தண்ணீர் எடுக்கிறார் என்று புதுக்கோட்டை தி.மு.க மாவட்டச்செயலர் செல்லபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
புதுக்கோட்டையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் காரணம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.
அதற்கு விஜயபாஸ்கர் பொய்யான குற்றச்சாட்டு தெரிவிப்பதாக புதுக்கோட்டை மாவட்ட போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அந்த வழக்கை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லுாரியில் 3000 லிட்டருக்கு அனுமதி பெற்றுள்ளார். ஆனால், 5000 லிட்டர் எடுக்கும் இவர், புதுக்கோட்டை நகரில் ஏற்படும் தண்ணீர் பிரச்னை பற்றி கூறுகிறார்.
திருச்சி ஜீயபுரத்தில் இருந்து புதுக்கோட்டை 48 கிலோ மீட்டர் துாரத்திற்கு, 76 கோடி ரூபாய் செலவில் புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர, 875 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அனுப்பியுள்ளோம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், குடிநீர் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 1,500 ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார் என்று விஜயபாஸ்கர் கூறுகிறார்.
ஆனால், விஜயபாஸ்கர் தான் வெற்றி பெறுவதற்காக, 140 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

