/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பிரதமர் மோடி பிளக்ஸ் பேனர் கிழிப்பு
/
பிரதமர் மோடி பிளக்ஸ் பேனர் கிழிப்பு
ADDED : மே 02, 2025 08:48 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், வடக்கு ராஜவீதி உட்பட சில பகுதிகளில், தமிழக பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் மத்திய அரசு என்று, மத்திய அரசின் பெண்களுக்கான திட்டங்களை விளக்கி, நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி படத்துடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேனர்கள் வைப்பதற்காக, மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆறு நாட்களுக்கான முன் அனுமதியுடன் கூடிய கட்டணம் செலுத்தப்பட்டு, அதை பிளக்ஸ் பேனரில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் பிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்தியுள்ளனர். இதைப்பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்தனர். கிழித்து தொங்கி கொண்டிருந்த பிளக்ஸ் பேனர்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.