நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் அரசடிவண்டல் கிராமத்தில் உள்ள சேர்மதாய் வாசன் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வக்கீல் பிரபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது குழந்தைகள் வெளியிடங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து போதைப் பொருட்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சட்ட தன்னார்வலர் ராஜேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.