ADDED : ஆக 27, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, : கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
முதல்வர் தர்மர் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் அழகப்பன், ராஜாமுகமது முன்னிலை வகித்தனர். பேராசிரியர் விக்டோரியா ஆலின் வரவேற்றார்.
மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து விளக்கினர்.
மாணவியர் தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேராசிரியர் சரவணகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்டார மேலாளர் மயில்ராஜ் செய்தார்.

