/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 09, 2025 04:08 AM
கடலாடி : கடலாடியில் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அபிராமி அம்மன் கோயிலுக்கு வழிபட சென்ற ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமாரை கைது செய்த போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து கடலாடி பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலாடி ஹிந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் பூமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேர்மன் முன்னிலை வகித்தார். முதுகுளத்துார் ஒன்றிய தலைவர் திருமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் பா.ஜ.,முன்னாள் மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோன்று ரெகுநாதபுரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் கிஷோர் முன்னிலை வகித்தார். காளீஸ், சுரேஷ்பாபு, முனீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.