/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லம் தேடி கல்வி 2.0; தன்னார்வலர்களுக்கு பயிற்சி
/
இல்லம் தேடி கல்வி 2.0; தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 28, 2024 11:51 PM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி 2.0 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்து பயிற்சியினை துவங்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுநர் ஈஸ்வரவேலு வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பயிற்சியினை பார்வையிட்டு பயிற்சி கட்டகங்களை வழங்கினார்.
இல்லம்தேடி கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஜே.லியோன், மாவட்ட ஆசிரியர்கல்வி, பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராமர், சைல்டு அமைப்பு விஜயராம், வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செந்துார் முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி பங்கேற்றனர்.
இதுபோன்று உச்சிப்புளி, திருப்புல்லாணி, கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, நயினார்கோவில், திருவாடானை ஆகிய இடங்களில் 770 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டாரக்கல்வி அலுவலர்கள், வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.