ADDED : பிப் 25, 2025 07:07 AM
கமுதி: கமுதி -- முதுகுளத்துார் புதிய தார் ரோட்டை மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
கமுதி நெடுஞ்சாலை கட்டுமானப் பராமரிப்பு உட்கோட்ட அலுவலகம் சார்பில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒருங்கிணைந்த சாலை திட்டம், சிறப்பு பழுதுபார்த்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கமுதி -முதுகுளத்துார் ரோடு 2024--25ல் 2.4 கி.மீ., ரூ.1.20 கோடியிலும், சிறப்பு பழுது பார்த்தல் 2024--25 திட்டத்தில் 2.6 கி.மீ., துாரம், ரூ.1.20 கோடியில் ரோடு அமைக்கும் பணி முடிவடைந்தது.
இதையடுத்து முடிவு பெற்ற பணியை மதுரை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்தார். உடன் ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் முருகன், கமுதி உட்கோட்ட பொறியாளர் சக்திவேல் உட்பட அலுவலக பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

