
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே டி.இளையான்குடி கிராமத்தில் அய்யனார், மாரியம்மன் கோயில் திருவிழா ஜூலை 16ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று புரவி எடுப்பு விழா நடந்தது.
ஆண்டிவயல் கிராமத்தில் மண்ணால் செய்யப்பட்ட குதிரை, அய்யனார், கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்கள் சிலையாக செய்யப்பட்டு ஊர்வலமாக துாக்கி சென்று கோயில் முன்பு இறக்கி வைத்து பூஜை செய்தனர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.