ADDED : ஜூலை 29, 2024 10:36 PM

ராமநாதபுரம் : பரமக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடியில் வட்ட வழங்கல் அலுவலர் கீதா நடத்திய சோதனையில் வாகனத்தை விட்டு ஒருவர் தப்பி ஓடினார். அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் 3100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை கடத்திய சிக்கல் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் வீரமணி 30, தலைமறைவாக இருந்தார்.
இது குறித்து கீதா உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
எஸ்.ஐ., மோகன், சிறப்பு எஸ்.ஐ., குமாரசாமி, ஏட்டு தேவேந்திரன் ஆகியோர் வீரமணியை கைது செய்து விசாரிக்கின்றனர். ரேஷன் கடைகளில் நடக்கும் கடத்தலை தடுக்க பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தரலாம்.
புகார் தருபவர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும், என உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.