ADDED : ஜூலை 21, 2026 05:51 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரோடு அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதியடைகின்றனர்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி ஆதம் நகர் கண்ணகி தெருவில் சமீபத்தில் ரோடு அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. முதல் தெருவில் முழுமையாக ரோடு அமைத்த நிலையில், 2 வது தெருவில் பாதி தெருவிற்கு மட்டும் முழுமையாக தார் ஊற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள பகுதியில் ஜல்லிக்கற்கள் மட்டும் போட்டப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். இதுகுறித்து உதவி பொறியாளர் பாண்டி முருகனிடம் கேட்ட போது, ‘ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த இரு நாட்களில் முழுமையாக முடிவடையும்’ என்றார். ––
