ADDED : ஏப் 09, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிப்பட்டணம் வள்ளுவன் நடுநிலைப்பள்ளியில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கினர். தலைமையாசிரியர் மாதவன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவுஎஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் முன்னிலை வகித்துமரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் பயன்கள், இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் விரிவாக பேசினார்.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்களுக்கு மஞ்சள் பைகள்வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கார்த்திகை செல்வி, முனீஸ்வரி, ஸ்ரீதேவி பங்கேற்றேனர்.

