நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில், : பரமக்குடி அருகே நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது.
மாணவர்கள் சூரிய கடிகாரம், சூரிய குடும்பம், கோள்கள் பற்றிய நிகழ்வுகள், நிலவின் வளர் மற்றும் தேய்பிறை அமைப்பு, டாப்ளர் விளைவு, ராக்கெட் மாதிரி, விண்வெளி அமைப்புகள், செயற்கை வானவில் தோற்றம், லென்ஸ் தத்துவங்கள், தானியங்கி விளக்கு என 30க்கும் மேற்பட்ட அறிவியல் கருவிகளை வைத்திருந்தனர்.
பாரம்பரிய உணவு வகைகளை வரிசைப்படுத்தி, அவற்றின் சத்துக்கள் மற்றும் தேவைகள் குறித்து விளக்கினர். இவற்றை பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.
அறிவியல் ஆசிரியர் சொக்கநாதன் ஒருங்கிணைத்தார்.