ADDED : மார் 15, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். சிங்கப்பூர் எஸ்மிடெக் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரியான முன்னாள் மாணவர் மணிகண்டன் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.
மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இயந்திரவியல் துறை தலைவர் கார்த்திகேயன், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் தர்மபிரபாகரன் நன்றி கூறினார்.