தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கிரியேட்டிவ் பள்ளி மாணவர்கள் 2 பேர் மலையேற்றத்திற்கு தேர்வு

கிரியேட்டிவ் பள்ளி மாணவர்கள் 2 பேர் மலையேற்றத்திற்கு தேர்வு

கிரியேட்டிவ் பள்ளி மாணவர்கள் 2 பேர் மலையேற்றத்திற்கு தேர்வு


UPDATED : நவ 16, 2026 04:24 PM

ADDED : நவ 16, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 04:24 PM ADDED : நவ 16, 2026 04:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை அருகே புலியூரில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் இந்திய மலையேற்ற முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருவாடானை அருகே புலியூரில் கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 9 வது படிக்கும் என்.சி.சி.,மாணவர்கள் சாம்சன், விஷ்ணுவர்தன் ஆகிய இருவரும் கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடைபெறவுள்ள கர்நாடகா மற்றும் கோவா அகில இந்திய மலையேற்ற முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியில் என்.சி.சி., பிரிவு சார்பில் சில நாட்களுக்கு முன்பு இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான என்.சி.சி., மாணவர்கள் கலந்து கொண்டனர். கடுமையான உடற்தகுதி மற்றும் திறனறித் தேர்வுகளை கடந்து கிரியேட்டிவ் பள்ளி மாணவர்கள் இந்த தேசிய முகாமிற்கு தகுதி பெற்றுள்ளனர். நவ.,17 முதல் 22 வரை மலையேற்ற முகாம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் இணைந்து இம்மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்த தேசிய மாணவர் படை ஆசிரியர் டேனியல், பள்ளி தாளாளர் சண்முகம் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us