தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாற்றுத்திறனாளிகள் 235 பேர் கைது 

 மாற்றுத்திறனாளிகள் 235 பேர் கைது 

 மாற்றுத்திறனாளிகள் 235 பேர் கைது 


ADDED : பிப் 11, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 235 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்குவது போல் உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 வரை மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதாந்திர உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவிக்கும் வரை தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்றனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 98 பெண்கள் உட்பட 235 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிராம உதவியாளர்கள் முழு நேரப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது, 'டி' கிரேடு நிலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக கிராம உதவியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 114 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us