/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறிவியல் தேர்வில் 379 பேர் ஆப்சென்ட்
/
அறிவியல் தேர்வில் 379 பேர் ஆப்சென்ட்
ADDED : ஏப் 12, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அறிவியல் பாடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 379 பேர் பங்கேற்கவில்லை.
மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவங்கி ஏப்.,15 வரை நடக்கிறது. 16 ஆயிரத்து 399 மாணவர்கள், தனித்தேர்வர்களாக 273 பேர் என 16 ஆயிரத்து 672 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நேற்று நடந்த அறிவியல் பாடத்தேர்வில் மாணவர்கள் 348 , தனித்தேர்வாளர்கள் 31 பேர் என 379 பேர் பங்கேற்கவில்லை. இறுதித் தேர்வாக ஏப்., 15ல் சமூக அறிவியல் நடைபெற உள்ளது.

