ADDED : பிப் 14, 2024 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் அரிய வகை டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.
ராமேஸ்வரம் தீவைச் சுற்றிலும் டால்பின், ஆமைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. நேற்று தங்கச்சிமடம் வில்லுாண்டி தீர்த்தம் கடற்கரையில் 6 அடி நீளம், 80 கிலோ எடையுள்ள பெண் டால்பின் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இது பாறையில் மோதியதா அல்லது மீனவர்கள் கடலில் இழுக்கும் இரட்டை மடி வலையில் சிக்கி உயிரிழந்ததா என வனத்துறையினர் விசாரித்தனர். கால்நடை டாக்டரின் பரிசோதனைக்கு பிறகு கடற்கரையில் உடல் புதைக்கப்பட்டது.

