/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாழ்வாக செல்லும் உயர்அழுத்த மின்கம்பி
/
தாழ்வாக செல்லும் உயர்அழுத்த மின்கம்பி
ADDED : நவ 05, 2024 05:05 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சடையனேரியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் உயர்அழுத்த மின்கம்பியால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே சடையனேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
கிராமத்திற்கு கடலாடி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு கடந்த பலஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மின்கம்பத்தின் வழியாக மின்கம்பி செல்கிறது. தற்போது விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் உயர்அழுத்த மின்கம்பியால் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். பணிகளை மேற்கொள்வதற்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள்வருவதில்லை. இதனால் விவசாய பணிகளும் கிடப்பில் விடப்படும் அவலநிலை உள்ளது.
விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் ஒருசில விவசாயிகள் மின்கம்பியை கம்புகளை வைத்து உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே கிராமத்தில் தாழ்வாக செல்லும் உயர்அழுத்த மின்கம்பியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.