/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் காலிப்பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல் மேல்சட்டை அணியாமல் ஒருவர் தர்ணா

ADDED : ஆக 26, 2025 03:30 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவமனை களிலும் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துாரை சேர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் மணி என்பவர் மேல்சட்டை அணியாமல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மணி கூறுகையில், ராமநாத புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக் குரிய டாக்டர் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
இதே போன்று தலைக்காயத்திற்கு போதிய டாக்டர்கள் இன்றி வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள டாக்டர்கள் பணி யிடத்தை நிரப்ப வேண்டும் என்றார்.
முன்னதாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட மணியை போலீசார் கண்டித்தனர், அப்போது மக்களின் கவனத்தை ஈர்க்க சிறிது நேரம் தரையில் அமர்ந்தேன் எனக் கூறினார்.
போலீசார் அறிவுரைப் படி மேல்சட்டை அணிந்தபடி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தார்.