/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் மாணவிகளின் முயற்சியால் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூரை
/
முன்னாள் மாணவிகளின் முயற்சியால் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூரை
முன்னாள் மாணவிகளின் முயற்சியால் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூரை
முன்னாள் மாணவிகளின் முயற்சியால் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூரை
ADDED : அக் 30, 2025 03:44 AM

தொண்டி: தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் கூரை அமைத்து கொடுத்தனர்.
தொண்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வராண்டாவில் கூரை வசதி இல்லாமல் இருந்தது. பள்ளி துவங்கும் போதும், வராண்டாவில் நடமாடும் போதும் மழை, வெயிலால் மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் கூரை அமைக்க இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி ரூ.4 லட்சத்தில் அமைக்கப்பட்டு மாணவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட்டது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் செய்யது அலி, தலைமை ஆசிரியை சத்யா, முன்னாள் மாணவி சுனைதாபானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.