/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொட்டித்தீர்த்த மழை திண்டாடிய மக்கள் ரயில் நிலையத்திற்குள் தோன்றிய அருவி; சுரங்கப்பாதையில் உருவான குளம்
/
கொட்டித்தீர்த்த மழை திண்டாடிய மக்கள் ரயில் நிலையத்திற்குள் தோன்றிய அருவி; சுரங்கப்பாதையில் உருவான குளம்
கொட்டித்தீர்த்த மழை திண்டாடிய மக்கள் ரயில் நிலையத்திற்குள் தோன்றிய அருவி; சுரங்கப்பாதையில் உருவான குளம்
கொட்டித்தீர்த்த மழை திண்டாடிய மக்கள் ரயில் நிலையத்திற்குள் தோன்றிய அருவி; சுரங்கப்பாதையில் உருவான குளம்
ADDED : நவ 25, 2025 05:24 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 7.00 மணி நிலவரப்படி மாவட்டம் மழுவதும் 662மி.மீ மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூரைகள் முறையாக பராமரிக்கப்படாததால் மழை தண்ணீர் அருவி போல் கொட்டியது. லாந்தை பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தாமரைக்குடி கண்ணனை, லாந்தைஉள்ளிட்ட கிராமங்கள் தனித்தீவாக மாறியது.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 5000 பயணிகள் வரை ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பயணிகள் ராமலிங்க விலாசம், உத்தரகோசமங்கை, தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதால் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறுகின்றனர். அதே போல் மதுரை, காரைக்குடி, திருச்சி, சென்னைக்கு தினமும் ஏராளமான பயணிகள் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து செல்கின்றனர்.
ரயில் நிலையத்தின் கூரைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் அமரும் பகுதியில் தண்ணீர் கொட்டுகிறது.
சமீபத்தில் பெய்த மழையின் போது ரயில் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மழைநீர் அருவி போல் கொட்டியது. இதனால் இரவில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் உடைமைகள் நனைந்தது. நனைந்தபடி பயணிகள் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதே போல் 2 வது, 3வது நடைமேடை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதனால் ரயிலில் இருந்து பயணிகள் இறங்கும் போது தடுமாறுகின்றனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் தனியாக இறங்க முடியாமல் மற்றவர்களின் துணையை நாடும் நிலை உள்ளது.ரயில் நிலையத்தை முறையாக பராமரிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையத்தின் கூரையில் தண்ணீர் செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் தேங்கி வடிந்தது. ராமநாதபுரம் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
புதிய கட்டடம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்பின் ரயில் நிலையத்தின் கூரை, நடைமேடைகள் புதுப்பிக்கப்படும் என்றனர்.

