/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுபாட்டில் மாலை அணிந்து வந்த வாலிபர்
/
மதுபாட்டில் மாலை அணிந்து வந்த வாலிபர்
ADDED : டிச 09, 2025 06:01 AM

ராமநாதபுரம்: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி வாலிபர் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து வந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது.
வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, குடிநீர் இணைப்பு வழங்குவது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 325 மனுக்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும்.
அவ்வாறு தீர்வு வழங்க முடியாத மனுக்களின் நிலை குறித்து அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
* ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் என்பவர் பாம்பன் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மதுபாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கூறியதாவது:
பாம்பன் பகுதியில் ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், பள்ளிகள் என மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதுவரை அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

