/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீர் சேமிப்பில் சிறந்து விளங்கிய ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விருது
/
நீர் சேமிப்பில் சிறந்து விளங்கிய ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விருது
நீர் சேமிப்பில் சிறந்து விளங்கிய ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விருது
நீர் சேமிப்பில் சிறந்து விளங்கிய ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விருது
ADDED : டிச 09, 2025 06:01 AM
ராமநாதபுரம்: நீர் சேமிப்பில் சிறந்து விளங்கிய ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனாதிபதி விருது வழங்கிய நிலையில் அதனை முதல்வர் ஸ்டாலினிடம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் மூலம் நீர் சேமிப்பில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, தடுப்பணைகள் கட்டியது, புதிய குளங்கள் வெட்டியது, உபயோகப்படுத்தப்பட்ட நீரை நிலத்திற்கு அடியில் செலுத்தி சேமிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை மத்திய அமைச்சக குழு பார்வையிட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
இவ்விருதை புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராமநாதபுரம் சப்--கலெக்டர் திவ்யான்ஷூ நிகம் பெற்றுக் கொண்டார்.
மதுரை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விருதை காட்டி வாழ்த்து பெற்றார்.