/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நம்பியான் வலசையில் கும்பாபிஷேகம்
/
நம்பியான் வலசையில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 09, 2025 06:02 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி உத்தரவை ஊராட்சி நம்பியான்வலசை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. அனுக்ஞை, விநாயகர் மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று சூரிய பூஜை, கோ பூஜை உள்ளிட்ட இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி சித்தி விநாயகர், முத்து மாரியம்மன், சண்முகநாத சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவர்கள் முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நம்பியான் வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

