நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அம்மன் மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு திருவாடானையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
* ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சுவாமி ஊர்வலம் நடக்கிறது. நேற்று முன்தினம் அன்னவாகனத்தில் சிநேகவல்லி அம்மன் வீதியுலா நடந்தது.