UPDATED : நவ 20, 2026 09:54 PM
ADDED : நவ 20, 2026 09:54 PM

அ நிறம் | அளவு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தில் கட்சியின் 55 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அப்போது முன்னாள் நகர், மாவட்ட மற்றும் இலக்கிய அணி செயலாளராக செயல்பட்ட திலகர் 76, நீண்ட நேரம் பேசினார். தொடர்ந்து பேசி அமர்ந்தவுடன் மயங்கி விழுந்து மேடையிலேயே உயிரிழந்தார். நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
