/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைநீரில் சிக்கி தவிக்கும் முதியவர்
/
மழைநீரில் சிக்கி தவிக்கும் முதியவர்
ADDED : டிச 01, 2025 07:09 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் பல தெருக்களில் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
இதில் ராமேஸ்வரம் கரையூரில் மீனவர் ரெமியான்ஸ்70, சில ஆண்டு களுக்கு முன்பு கண் பார்வை இழந்தார்.
இவரது இடிந்து விழும் தருவாயில் உள்ள வீட்டை சுற்றியும், உள்ளேயும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
இதனால் வீட்டில் இருந்து ரெமியான்ஸ், மனைவி இருவரும் வெளியேற முடியாமலும், உணவு சமைக்கவும் வழியின்றி தவிக்கின்றனர்.
இவர்களது பசியை போக்கி பாதுகாத்த ஒரே மகனும் தற்போது இலங்கை சிறையில் தண்டனை கைதியாக உள்ளார்.
இதனால் உதவிட வழியின்றி மழைநீரில் சிக்கி உள்ள முதியவரை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

