/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் இ---சேவை மையத்தில் அங்கன்வாடி
/
ஏர்வாடியில் இ---சேவை மையத்தில் அங்கன்வாடி
ADDED : டிச 06, 2025 05:42 AM
கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சி வெட்டன்மனை தனியார் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக 2 கி.மீ.,ல் உள்ள இ--சேவை மையத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இதனால் சிறு குழந்தை களை அங்கன்வாடி மையத்திற்கு கொண்டு செல்வதற்கு பெற்றோர் சிரமப்படுகின்றனர். பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு முருக சக்தி கூறியதாவது:
ஏர்வாடி தர்கா பின்புறம் உள்ள இ--சேவை மையத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் இயங்கி வருகிறது. இதனால் 2 கி.மீ., அதிகம் உள்ளதால் சிறு குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பெற்றோர் சிரமப்படுகின்றனர். வெட்டன்மனை பகுதியில் தன்னார்வலர்களின் முயற்சியால் அங்கன்வாடி மையம் கட்டித் தருவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர்கள் இதுகுறித்து உரிய முறையில் பரிசீலனை செய்து வெட்டன்மனை பகுதியில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

