/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் தொழில்நுட்ப கல்லுாரியில் கருத்தரங்கம்
/
வேளாண் தொழில்நுட்ப கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : டிச 06, 2025 05:36 AM
கமுதி: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி யில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமை நிறுவனத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு திட்டத்தில், 'நிமிர்ந்து நில்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். முதல்வர் ராமர் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட திட்ட மேலாளர் பொன்வேல் முருகன் பேசிய தாவது:
இத்திட்டத்தின் வரைமுறைகள் மாணவர் களுக்கு தொழில் மேம்பாடு குறித்தும் தங்களது புதுவிதமான யோசனைகள் மற்றும் கருத்துக்களை சமர்ப்பிக்க தேவையான வழிமுறை களையும், அதில் வெற்றி பெற்று பரிசுத்தொகை பெறும் விவரங்கள் பற்றியும், மாணவர்கள் அனைவரும் தொழில் முனைவோராகவும் வேண்டும் என்றார்.
உதவி பேராசிரியர் ரஞ்சிதம் ஒருங்கிணைத்தார். மாணவர்கள்,பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

