நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி -சாயல்குடி அருகே மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் அருகே பழமை வாய்ந்த உலகம்மன் கோயில் உள்ளது.
கடந்தாண்டு புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு பூர்த்தியானதை முன்னிட்டு வருடாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜையுடன் மூலவர் உலகம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.