/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு மேலும் ஒருவர் கைது
/
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 20, 2025 02:57 AM

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் வழுதுாரில் தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கவுதம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வழுதுார் மாரியம்மன் கோயிலில் ஜூலை 5 முளைப்பாரி திருவிழா நடந்தது. அப்போது தி.மு.க., தொழில்நுட்பப் பிரிவு ராமநாதபுரம் ஒன்றிய அமைப்பாளர் கவுதமிற்கும் அப்பகுதியை சேர்ந்த பிரபுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 பேர் கவுதம் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
கேணிக்கரை போலீசார் பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வந்தனர். இதில் தொடர்புடைய மண்டபம் கேம்ப் விக்னேஷ், 22, இருநாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். நேற்று வழுதுாரைச் சேர்ந்த சுரேஷ் 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.