UPDATED : அக் 31, 2026 06:39 PM
ADDED : அக் 31, 2026 06:36 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்.,26 முதல் நவ.,1 வரை அனுசரிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டு ‘நேர்மையே வளமை’ எனும் தலைப்பில் பல்வேறு மாரத்தான், ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக அரண்மனை பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. லஞ்ச ஒழிப்பை வலியுறுத்தி சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவை நடந்தன.––
