/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கையெழுத்து இயக்கம்
/
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கையெழுத்து இயக்கம்
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கையெழுத்து இயக்கம்
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கையெழுத்து இயக்கம்
ADDED : நவ 04, 2025 03:57 AM
ராமநாதபுரம்:  ராமநாதபுரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
நாடு முழுவதும் அக்.,27 முதல் நவ.,2 வரை ஊழல் கண்காணிப்பு விழிப் புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ராமநாத புரத்தில் உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கையெழுத்து இயக்கத்தை ராமநாத புரம் ஊழல் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி., ராம சந்திரன் துவக்கி வைத்தார்.
அப்போது கவிதை, கட்டுரை, ஓவியம், கலந்துரையாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.  முதல்வர் (பொ) கணேஷ்பாபு, தலைமை கண் காணிப்பு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.