/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பம்
/
வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பம்
ADDED : ஜூலை 26, 2025 11:28 PM
ராமநாதபுரம்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ),டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர்பயிற்சி அளிக்கவுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினரை சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
சென்னையில் உள்ள விடுதியில் இரு மாதம் தங்கி படிப்பதற்கான வசதி, உணவுக்கான செலவு நிறுவனம் மூலம் வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புவோர் www.tahdco.com எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.