தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/குழந்தைகள் ஆதரவாளர் பணிக்கு விண்ணப்பம்

குழந்தைகள் ஆதரவாளர் பணிக்கு விண்ணப்பம்

குழந்தைகள் ஆதரவாளர் பணிக்கு விண்ணப்பம்


UPDATED : நவ 07, 2026 04:09 PM

ADDED : நவ 07, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 04:09 PM ADDED : நவ 07, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்குவதற்கான ஆதரவு நபர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சமூகப்பணி, சமூகவியல், சட்டம், உளவியல், குழந்தைகள் வளர்ச்சி, குழந்தைகள் நலன், சுகாதாரம் அல்லது குழந்தைகள் நலனுடன் தொடர்புடைய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் நலனுடன் தொடர்புடைய துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தப்பட்சம் 25 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பம் www.ramanathapuram.nic.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ நவ.,20 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us