UPDATED : நவ 07, 2026 11:30 PM
ADDED : நவ 07, 2026 04:06 PM

அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மெய்யம்புளியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் தீபாவளி பண்டிகையில் தீ விபத்துகளை தடுப்பது மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்பை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி மேலாளர் பிரம்மச்சாரணி லட்சுமியம்மா தலைமையில் நடந்தது.
ராமேஸ்வரம் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் பாண்டி, தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து மற்றும் பேரிடர் காலத்தில் தற்காப்பது குறித்து விளக்கி பேசி, செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முதல்வர் இந்திராதேவி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
